search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சலிங்க அருவி"

    • திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தற்போது மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.
    • அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வருவார்கள்.

    உடுமலை:

    கடும் வெயில் காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந் து வருகின்றனர்.

    உடுலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி, வண்ண மீன் காட்சியகம், நீச்சல்குளம், திருமூர்த்திமலை ஆகியவை உள்ளன. தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வருவார்கள்.

    தற்போது கோடை துவங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. மேலும் 11,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து சுற்றுலா தலங்களை நோக்கி மக்கள் படையெடுக்க துவங்கி விட்டனர். குறிப்பாக அருவி, ஆறு, குளம் உள்ள பகுதிகளுக்கு அதிகளவில் செல்கின்றனர்.

    திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தற்போது மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. வெயிலுக்கு இதமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து அருவியில் குளிக்கின்றனர்.

    இதேபோல் அமராவதி ஆறு பகுதிக்கும் ஏராள மானோர் செல்கின்றனர். ஆற்றில் தற்போது தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு விட்டாலும் ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குமரலிங்கம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் தேங்கிய தண்ணீரில் உள்ளூர் மக்கள் நீராடி செல்கின்றனர்.  

    • அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்ததுடன் குடும்பத்தோடு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
    • குழந்தைகள் பெரியோர்கள் வெயிலின் தாக்கத்தால் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    உடுமலை :

    ஆங்கில புத்தாண்டையொட்டி உடுமலை அமண லிங்கேஸ்வரர் கோவிலில் மும்மூர்த்திகள், விநாயகர், சுப்பிரமணியர், நவகிரகங்கள், சப்தகன்னியருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.அதில் கலந்து கொள்வதற்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கார், வேன்,பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வருகை தந்தனர்.

    சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.பின்னர் அனைவரும் அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்ததுடன் குடும்பத்தோடு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.இதையடுத்து அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு மும்மூர்த்திகள் உள்ளிட்ட அனைத்து கடவுள்களையும் சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து அணைப் பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு அமர்ந்து ரசித்ததுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். இதனால் அணைப்பகுதி,பஞ்சலிங்க அருவி மற்றும் கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டமும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.அதை சீரமைப்பதற்கு போலீசார் முன்வராததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

    மேலும் வாகன நெருக்கடி காரணமாக அரசு பஸ்களில் கோவிலுக்கு வருகை தந்த பொதுமக்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் முன்பாக இறக்கி விடப்பட்டனர்.இதனால் குழந்தைகள் பெரியோர்கள் வெயிலின் தாக்கத்தால் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    • வடமேற்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி கடந்த வாரம் பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்தது.
    • வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகள் நீராதாரமாக உள்ளது.

    நீர்வழித்தடங்களில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது அதில் தானாகவே கரைந்து விடுகிறது. இதனால் தண்ணீர் உடலின் மேல் விழும்போது உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அதில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

    இந்தநிலையில் வடமேற்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி கடந்த வாரம் பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. பாதுகாப்பற்ற சூழல் நிலவியதால் அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.

    தற்போது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சபரிமலை சீசன் என்பதால் ஐய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது.

    • பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
    • அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதியில் நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள அருவிக்கு மேல் குருமலை, கீழ் குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர்வரத்து ஏற்படுகிறது.

    இந்தநிலையில் பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி வெள்ளம் கொட்டுகிறது. இதனால் அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    வெள்ளம் காரணமாக பஞ்சலிங்க அருவியில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதியில் நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • பருவநிலை மாற்றத்தால் தொடர் மழை பெய்து வருகிறது.
    • அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    உடுமலை :

    உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றத்தால் தொடர் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழையாகவும் விட்டு விட்டு சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் நகரில் எப்போதும் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தொடர்ந்து தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    நகரில் பெய்யும் மழை காரணமாக சில இடங்களில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். வெள்ளம் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில்  புகழ் பெற்ற பஞ்சலிங்கம் அருவி உள்ளது. மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிற்றாறுகள் வழியாக தண்ணீர் வந்து பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  இதனால் வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ×